/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊர்குளத்தான்பட்டி மஞ்சுவிரட்டு 200 காளைகள் பங்கேற்பு
/
ஊர்குளத்தான்பட்டி மஞ்சுவிரட்டு 200 காளைகள் பங்கேற்பு
ஊர்குளத்தான்பட்டி மஞ்சுவிரட்டு 200 காளைகள் பங்கேற்பு
ஊர்குளத்தான்பட்டி மஞ்சுவிரட்டு 200 காளைகள் பங்கேற்பு
ADDED : ஜன 04, 2025 04:06 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் ஊர்குளத்தான்பட்டியில் நடந்த மார்கழி மூன்றாவது வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டில் 200 க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. மாடு பிடிக்க முயன்ற 10 பேர் காயம் அடைந்தனர்.
ஊர்குளத்தான்பட்டி முனியய்யா கோயிலில் மார்கழி மூன்றாவது வெள்ளியில் நடைபெறும் படைப்பு திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். நேற்று காலை 10:30 மணிக்கு கிராமத்தினர் கோயில் வழிபாடு முடிந்து ஊர்வலமாக மஞ்சுவிரட்டு திடலுக்கு வந்தனர். தொடர்ந்து தொழுவிலிருந்து காளைகள் அவிழ்க்கப்பட்டன.
3 மணி நேரம் நடந்த மஞ்சுவிரட்டில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை பிடித்தவர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் நுாற்றுக்கணக்கான கட்டுமாடுகளும் காலை முதல் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை பிடிக்க முயன்றதில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
திருப்புத்துார், சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால் கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.