/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
2026 தேர்தல் தி.மு.க.,- அ.தி.மு.க.,வை மையமாக வைத்து தான் நடக்கும் கார்த்தி எம்.பி., பேட்டி

ADDED : டிச 07, 2024 10:11 PM
சிவகங்கை:''தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் தி.மு.க., அ.தி.மு.க.,வை மையமாக வைத்து தான் நடக்கும் ''என கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது:
இந்திய ராணுவத்தில் தமிழகத்தில் இருந்து சேர்வதற்கு ஆர்வம் குறைந்துள்ளது. அதிகாரி அளவில் தமிழகத்தில் இருந்து ராணுவத்தில் பணிபுரிவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவதில் காட்டும் ஆர்வம் மத்திய அரசு தேர்வு எழுதுவதில் காட்டுவதில்லை. மக்களிடம் திரைப்படத்தால் மாற்றம் வருவதில்லை. தமிழகத்தில் முதன்மையான அரசியல் கட்சி தி.மு.க., இரண்டாவது பெரிய அரசியல் கட்சி அ.தி.மு.க., இந்த இரண்டு கட்சிகளை மையமாக வைத்துதான் நிகழ்கால அரசியல் நடக்கிறது.
2026 தேர்தல் இந்த இரண்டு கட்சிகளை மையமாக வைத்துதான் நடக்க உள்ளது. அத்தேர்தலுக்கு தி.மு.க., கூட்டணி வலுவாக இருக்கிறது. மற்றொரு கூட்டணி எப்படி அமையப் போகிறது என்று தெரிய வில்லை. இந்தியாவில் யாராக இருந்தாலும் பிறப்பால் முதல்வராக முடியாது. தேர்தலில் நின்று வெற்றி, பெரும்பான்மை பெற்று தான் பதவிக்கு வர முடியும். சரித்திரம் புரியாதவர்கள் மன்னராட்சி இருக்கும் என்பார்கள்.
1947ல் காங்., கட்சி மன்னராட்சியை ஒழித்துவிட்டது. தற்போது கோயில் டிரஸ்டி கூட பிறப்பால் பதவிக்கு வரமுடியாது. வேங்கை வயல் பிரச்னையையும், மணிப்பூர் பிரச்னையையும் ஒன்றாக பார்க்க கூடாது என்றார்.