/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழக்கோட்டை மஞ்சுவிரட்டு மாடு முட்டி 21 பேர் காயம்
/
கீழக்கோட்டை மஞ்சுவிரட்டு மாடு முட்டி 21 பேர் காயம்
கீழக்கோட்டை மஞ்சுவிரட்டு மாடு முட்டி 21 பேர் காயம்
கீழக்கோட்டை மஞ்சுவிரட்டு மாடு முட்டி 21 பேர் காயம்
ADDED : ஜன 02, 2026 05:30 AM
சிவகங்கை: மதகுபட்டி அருகே கீழக்கோட்டை ஆதினமிளகி அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
சிவகங்கை, திருப்புத்துார், மதகுபட்டி, கல்லல், காரைக்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதியில் இருந்தும், மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
முதலில் கோவில் காளையும் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக 150க்கும் மேற்பட்ட காளைகள் தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.
முன்னதாக கிராமத்தை சுற்றியுள்ள கண்மாய் மற்றும் பொட்டலில் காலை 10:30 மணிக்கே 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்கி பிடித்தனர். காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவால் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது.

