/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொட்டகுடி கண்மாயில் 2.5 கி. கஞ்சா பறிமுதல்: வியாபாரி கைது
/
கொட்டகுடி கண்மாயில் 2.5 கி. கஞ்சா பறிமுதல்: வியாபாரி கைது
கொட்டகுடி கண்மாயில் 2.5 கி. கஞ்சா பறிமுதல்: வியாபாரி கைது
கொட்டகுடி கண்மாயில் 2.5 கி. கஞ்சா பறிமுதல்: வியாபாரி கைது
ADDED : ஆக 13, 2025 01:34 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே கொட்டகுடி கண்மாய் பகுதியில் விற்பனை செய்ய கஞ்சாவை பொட்டலங்களாக போட்டு கொண்டிருந்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்.ஐ., செல்வபிரபு மற்றும் போலீசார் கொட்டகுடி கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்க ஏதுவாக கஞ்சாவை பொட்டலங்களாக போட்டு கொண்டிருந்த வியாபாரி வைரன்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டியை கைது செய்தனர்.
தலைமறைவான மற்ற 4 பேரை தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள், ரூ.11,080 ஐ போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.