ADDED : பிப் 12, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: வள்ளலார் தினத்தை முன்னிட்டு ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வதற்கும் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறையும் அளித்துள்ளது.
காரைக்குடி பகுதிகளில் வள்ளலார் தினத்தில் விதிமுறைகளை மீறி இறைச்சி விற்பனை நடப்பதாக காரைக்குடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. மாநகராட்சி மாநகர் நல அலுவலர் வினோத் ராஜா தலைமையில் அதிகாரிகள், பர்மா காலனி, கோவில் உட்பட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட 25 கிலோ ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர். 100 கிலோ பாலிதீன் பைகளையும் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.