/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென்கரை மஞ்சுவிரட்டு 250 காளைகள் பங்கேற்பு
/
தென்கரை மஞ்சுவிரட்டு 250 காளைகள் பங்கேற்பு
ADDED : மே 16, 2025 03:18 AM
திருப்புத்துார்:கல்லல் ஒன்றியம் தென்கரை குன்னு அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 250 காளைகள் பங்கேற்றன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெறும். நேற்று காலை 10:00 மணிக்கு கிராமத்தினர் கோயிலில் சிறப்பு வழிபாட்டை முடித்து ஊர்வலமாக தொழுவிற்கு வந்தனர். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு தொழு விலிருந்து காளைகள் அவிழ்க்கப்பட்டன. சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதைத் தவிர்த்து காலை முதல் வயல், கண்மாய் பகுதியில் பரவலாக கட்டுமாடுகளும் அவிழ்க்கப்பட்டன.
மாடுகள் முட்டியதில் 4 பேர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக சிராவயல் வி.ஏ.ஓ.சிவக்குமார் புகார் அளித்ததின் பேரில் நாச்சியாபுரம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.