/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கடிதம் எழுதும் போட்டியில் மாநில அளவில் 2ம் இடம்
/
கடிதம் எழுதும் போட்டியில் மாநில அளவில் 2ம் இடம்
ADDED : மே 06, 2025 06:58 AM
சிவகங்கை: தபால் துறை மூலம் மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டியில் பூவந்தி கல்லுாரி மாணவி 2 ம் இடம் பிடித்துள்ளதாக, சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இந்திய தபால் துறையில் தபால் எழுதும் பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு, 'தாய் அகார்' எனும் கடிதம் எழுதும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும்.
கடந்த ஆண்டிற்கான (2024--25) போட்டியில் சிவகங்கை மாவட்டம்,பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி மாணவி எஸ்.தேவதர்ஷினி 18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு போட்டியில் தமிழ்நாடு வட்ட அளவில்2ம் இடம் பிடித்து, ரூ.10,000 பரிசு தொகை பெற்றார்.
கல்லுாரியில் வைத்து அம்மாணவியை கவுரவித்து பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது, என்றார்.