தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மது போதையில் அடிதடிசிறுவர்கள் 3 பேர் கைது

மது போதையில் அடிதடிசிறுவர்கள் 3 பேர் கைது

மது போதையில் அடிதடிசிறுவர்கள் 3 பேர் கைது


ADDED : ஆக 23, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை,ஆக.24– -

சிவகங்கை அருகே ஒக்கூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனின் அப்பாவை வெட்டிய சிறுவர்கள் 3 பேரை மதகுபட்டி போலீசார் கைது செய்தனர்.

ஒக்கூர் மாசாத்தியார் தெரு தச்சு தொழிலாளி முத்துக்குமரன் 46. இவரது மகன் சிவகங்கை பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இந்த மாணவரிடம் அவரது நண்பர்கள் வீட்டில் இருந்த மீன் வெட்டும் கத்தியை வாங்கி சென்றுள்ளனர். அதை அவரது நண்பர்கள் திருப்பி தரவில்லை. இதனால் அலைபேசியில் தன் நண்பர்களிடம் பேசி கேட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மதுபோதையில் வந்த சிறுவர்கள் முத்துக்குமரன் வீட்டில் தகராறில் ஈடுபட்டு, அவரை வெட்டினர். மதகுபட்டி போலீசார் சிறுவர்கள் மூன்று பேரையும் கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். //

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us