UPDATED : ஆக 23, 2026 04:57 PM
ADDED : ஆக 23, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
கல்வி குழும தலைவர் பாபு வின்சென்ட் ராஜா தலைமை வகித்தார். ஆசிரியர் ஜான் கென்னடி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சேவியர் ராஜா, உதவி தலைமை ஆசிரியர் எட்வின் ரோசாரியோ அறிக்கை வாசித்தனர். ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஜான் கென்னடி, பவுலியன்ஸ், சேவியர், துாய்மை பணியாளர் மாரிமுத்து ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி முன்னாள் மாணவர் டாக்டர் சிவகுமார், சிவகாமி ஆகியோர் பள்ளிக்கு பசுமை தோட்டத்தை அர்ப்பணித்தனர். டாக்டர் வெங்கடாஜலபதி பரிசு வழங்கினார். ஆசிரியர், அலுவலர் சங்க செயலர் செல்வசுதாகர் நன்றி கூறினார். பாதிரியார்கள், பெற்றோர், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
////
