தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மணல் அள்ளிய 3 பேர் கைது:இயந்திரம் ,டூவீலர் பறிமுதல்

மணல் அள்ளிய 3 பேர் கைது:இயந்திரம் ,டூவீலர் பறிமுதல்

மணல் அள்ளிய 3 பேர் கைது:இயந்திரம் ,டூவீலர் பறிமுதல்


UPDATED : அக் 07, 2026 04:38 PM

ADDED : அக் 07, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 04:38 PM ADDED : அக் 07, 2026 04:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஏ.புதுக்குளம் பகுதியில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இயந்திரம் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் ஏ.புதுக்குளம் பகுதியில் உள்ள உப்பாறு பகுதியில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வி.ஏ.ஓ., துரைமுருகன் உப்பாற்று பகுதியை ஆய்வு செய்து உறுதி செய்தார். மானாமதுரை சிப்காட் எஸ்.ஐ., ராஜதுரை தலைமையிலான போலீசார் உப்பாற்று பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அரசு அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிய 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ்குமார் 22, சத்தியமூர்த்தி 26, சூர்யா 26 என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் மண் அள்ளிய இயந்திரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய டூவீலரை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us