/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடகு கடையில் 300 பவுன் கொள்ளை மேலும் ஒருவர் கைது
/
அடகு கடையில் 300 பவுன் கொள்ளை மேலும் ஒருவர் கைது
ADDED : அக் 07, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே மதகுபட்டி நகை அடகு கடையில் 300 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இங்கு கடந்த ஜூன் 8 அன்று இரவு சிங்கினிபட்டி பாண்டித்துரைக்கு சொந்தமான நகை அடகு கடை சுவற்றை துளையிட்டு, லாக்கரில் இருந்த 300 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். தனிப்படை போலீசார் ஏற்கனவே கள்ளக்குறிச்சி பழனி 44, பாண்டியன் 32, வேலாயுதம் 45 ஆகிய 3 பேரை கைது செய்திருந்த நிலையில், மேலும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் 38 என்பவரை கைது செய்து, இதில், தொடர்புடைய மேலும் 3 பேர்களை தேடி வருகின்றனர்.