/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் 3000 ஏக்கரில் நெல் சாகுபடி; தொடர் மழையால் மேலும் அதிகரிக்கும்

ADDED : அக் 19, 2024 10:54 PM

திருப்புத்துார் வட்டாரத்தில் தொடர் மழையாலும், ஆற்றில் நீர் வரத்தாலும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளை விட அதிகமாக நாற்று நடவு செய்துள்ளனர். இந்த மாதத்திற்குள் 3000 ஏக்கருக்கும் அதிகமாக நெல் சாகுபடியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை காலம் துவங்கி விட்டதால் இனி குறுகியகால வித்து, நேரடி விதைப்பில் விவசாயிகள் இறங்குவர். இப்பகுதியில் டிசம்பர் முதல் பகுதி வரை விதைப்பு நடைபெறும்.
வேளாண் துறையினர் கூறுகையில், திருப்புத்துார் பகுதியில் மழைநீர் பாதிப்பு இல்லை. விவசாயிகளுக்கு தேவையான பிகேஎம் 13, ஆர்.என்.ஆர்., எல்.என்.ஆர்., ஆகிய சன்ன ரக நெல் விதைகள் இருப்பு உள்ளது.
செவ்வாழை நோய் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மான்ய விலையில்ஜிங் சல்பேட் ஏக்கருக்கு250 கிராம் விற்கப்படுகிறது. தேவையான டி.ஏ.பி.. காம்ப்ளக்ஸ் உரமும் கூட்டுறவு சங்கங்களில் உள்ளது. என்றனர்.
மேலும் மழை தொடர்வதால் இப்பகுதியில் நெல் சாகுபடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.