/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
3000 ஆண்டு பழமையான இரும்பு எச்சம் கிண்ணம், முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
/
3000 ஆண்டு பழமையான இரும்பு எச்சம் கிண்ணம், முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
3000 ஆண்டு பழமையான இரும்பு எச்சம் கிண்ணம், முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
3000 ஆண்டு பழமையான இரும்பு எச்சம் கிண்ணம், முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
ADDED : நவ 13, 2024 11:39 PM

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் நல்லேந்தலில் 3000 ஆண்டு கால இரும்பு எச்சம், இரும்பு கிண்ணம், முதுமக்கள் தாழிகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
காளையார்கோவில் அருகே நல்லேந்தல், புரசடைஉடைப்பு உள்ளிட்ட பகுதியில் காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் தி.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்வலர் ரமேஷ், அழகப்பா பல்கலை தமிழ் துறை பேராசிரியர் கணநாதன், மாணவர் அருண்பாண்டி ஆய்வு செய்தனர்.
பாலசுப்பிரமணியன் கூறியதாவது: நல்லேந்தல் கிராம காடுகளில் ஆய்வு செய்ததில் பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு எச்சம், கிண்ணம், கல்பாசி, முதுமக்கள் தாழிகள் இருப்பதை கண்டறிந்தோம். பெருங்கற்கால பண்பாட்டில் இறந்தவர்களை வசிப்பிடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. அவர்களின் உடல்களை புதைத்து விட்டு அதன் மேல் அடையாள சின்னமாக கற்களை வைப்பர். இவை முதுமக்கள் தாழி என அழைக்கப்பட்டது.3000 ஆண்டுகள் பழமையான ஈம சின்னங்களாக உள்ளன.
அக்கால கட்டத்தில் மனிதன் நாடோடி வாழ்க்கையை கைவிட்டு ஆற்றங்கரை, நீர்நிலைகள் உள்ள இடங்களில் வாழ்ந்துள்ளனர். இப்பகுதியில் ஓடும் நாட்டார் ஆற்றுப்பகுதியை ஒட்டிய இடங்களில் வசித்துள்ளனர்.
குறிப்பாக இலந்தக்கரை, பகையஞ்சான் பகுதிகளில் முதுமக்கள் தாழி, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரும்பு எச்சங்கள் மண்ணின் மேற்பரப்பில் பரவிக்கிடக்கின்றன. நாட்டார் ஆற்று பள்ளத்தாக்கு பகுதியில் நல்லேந்தல், புரசடை உடைப்பு பகுதியில் செம்பாறைகள் உள்ள இடங்களில் புதை விடங்கள் அதிகம் காணப்படுகின்றன.
தமிழகத்தில் இது போன்று பல்வேறு இடங்களில் ஈம சின்னங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் செம்மண் பாறைகளை குடைந்து அதற்குள் பானையை வைத்து, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ததற்கான அடையாளமும் கிடைத்துள்ளன. இப்பகுதி மக்கள் கால்நடை வளர்ப்பு மட்டுமின்றி சிறுதொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான கல்பாசிகளும் கிடைத்துள்ளன.
தமிழக தொல்லியல் துறை ஆதிச்சநல்லுார், கீழடி போன்றே காளையார்கோவில் பகுதியிலும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

