/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க, நீக்க கோரி 32,453 மனு
/
வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க, நீக்க கோரி 32,453 மனு
வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க, நீக்க கோரி 32,453 மனு
வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க, நீக்க கோரி 32,453 மனு
ADDED : நவ 29, 2024 05:44 AM
சிவகங்கை: மாவட்டத்தில் 4 தொகுதிகளில் நடத்தப்பட்ட வாக்காளர் சுருக்க திருத்த முகாம் மூலம் 32,453 பேர் மனு செய்துள்ளனர்.
சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளின் கீழ் உள்ள 1,357 ஓட்டுச்சாவடிகள், தாலுகா அலுவலகம், ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் குறித்த வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் நடத்தப்பட்டது. அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் நவ.,16, 17 மற்றும் 23, 24 ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18,201, நீக்க 2,248, திருத்தம் செய்ய 12,004 பேர் என ஒட்டுமொத்தமாக 4 சட்டசபை தொகுதிகளில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் 32,453 பேர் மனு தாக்கல் செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஜன., 6 ம் தேதி வெளியிடப்பட உள்ளன.

