/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு 3606 பேர் பங்கேற்பு
/
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு 3606 பேர் பங்கேற்பு
ADDED : அக் 13, 2025 03:42 AM
சிவகங்கை : மாவட்ட அளவில் நேற்று நடந்த ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் 14 தேர்வு மையங்களில் 3,606 பேர் தேர்வினை எழுதினர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில அளவில் முதுகலை பட்டதாரி, உடற்கல்வி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் 1996 பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இம்மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்துாரில் 14 தேர்வு மையங்களில் தேர்வு எழுத 3,888 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கென நேற்று நடந்த தேர்வில் 3,606 பேர் தேர்வினை எழுதி நிலையில், 282 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
கல்வித்துறை இணை இயக்குனர் (நிர்வாகம்) குமார் தலைமையில், முதன்மை கல்விஅலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து ஆகியோர் உட்பட கண்காணிப்பு அலுவலர், பறக்கும் படையினர் தேர்வினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.