ADDED : அக் 13, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே அழகு மெய்ஞானபுரம் கோழி கடை உரிமையாளர் கண்ணன் 43.
இவரது கடைக்கு அருகே கல்யாணசுந்தரம் 45, என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே முன்பகை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு அரிவாளுடன் வந்த கல்யாணசுந்தரம், தாக்கியதில் கண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் காயம் ஏற்பட்டது.
சிவகங்கை போலீசார் வழக்கு பதிந்து, கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர்.