/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷனுக்கு 4 கி.மீ., கால் கடுக்க நடக்கும் அவலம் களத்துார் ஊராட்சி மக்கள் தவிப்பு

ADDED : செப் 23, 2024 06:15 AM
காரைக்குடி : சாக்கோட்டை அருகே களத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடைக்கு மக்கள் 4 கி.மீ., துாரம் கால்கடுக்க நடந்து செல்லும் நிலை, கஜா புயலின் போது சேதமான மின் கம்பங்கள் சீரமைக்காமல் கிடப்பில் கிடப்பதாக கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஊராட்சியின் கீழ் குனாக்காடு, மேலசெட்டிவயல், அம்மனாபட்டி, களத்தூர், மேலக்குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு அம்மனாபட்டியில் மட்டுமே ரேஷன் கடை உள்ளது.
இங்கு பொருட்கள் வாங்க பல்வேறு கிராமத்தினர் 4 கி.மீ., துாரம் கால் கடுக்க நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி களத்தூர், மேலகுடியிருப்பு பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும். கஜா புயலின் போது இப்பகுதியில் ஏற்பட்டபுயல் காற்றால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமானது.
இதனை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் மின்வாரியத்திடம் பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே இந்த ஊராட்சிக்கு கூடுதலாக ரேஷன் கடை, சேதமான மின்கம்பங்களை மாற்றித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.