/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
36 விற்பனையாளர் பணிக்கு 4149 பேர் விண்ணப்பம் சான்று சரிபார்ப்பு, நேர்காணல்

ADDED : நவ 27, 2024 08:16 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 36 விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.
மாவட்ட அளவில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கீழ் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளிலும், காலியாக உள்ள 36 விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கூட்டுறவு ஆட்சேர்ப்பு மையம் பிளஸ் 2 முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்றது. மாவட்ட அளவில் இருந்த 4,247 பேர் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த விண்ணப்பங்களில் 98 தகுதியின்றி தள்ளுபடி செய்யப்பட்டன.
தகுதியுள்ள 4,149 விண்ணப்பதாரர்களுக்கு நேற்று முன்தினம் முதல் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஷ்வரி, துணை பதிவாளர் நாகராஜன் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணலை துவக்கி வைத்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அரசு மகளிர் கல்லுாரி ஆடிட்டோரியத்திலும், நேர்காணல் இணை பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அந்தந்த மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர்கள், கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியிலும், நேர்காணலை நடத்தி வருகின்றனர்.