/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டையில் வீணாக கிடக்கும் 42 குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம்

ADDED : ஜூலை 13, 2025 11:15 PM

காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு 42 புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட உள்ளது.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள் இருந்தன. தற்போது சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி ஆகிய ஊராட்சிகள் காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், உள்ள ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணிக்கு பேட்டரி வாகனம் வழங்கப்பட்டு வருகிறது.
தூய்மை பணியாளர்கள் பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய 42 பேட்டரி வாகனங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி வாகனங்களை பயன்படுத்தாமல் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். பேட்டரி வாகனங்களை ஆய்வு செய்ய தொழில்நுட்ப அலுவலர்கள் வராததால், பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.