ADDED : மார் 19, 2024 05:34 AM
சிவகங்கை: சிவகங்கை தாலுகாவில்போலீசார் சோதனையில் 42 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
சிவகங்கை டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன், தாலுகா எஸ்.ஐ., பிரதாப் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாட்டரசன்கோட்டை கருதிப்பட்டியை சேர்ந்த ஜெயந்தி என்பவர் 25 பாக்கெட் புகையிலை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தொடர் விசாரணையில் மதகுபட்டி பகவான் நகர் சிக்கந்தர் மகன் சாகுல்ஹமீது என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் 1380 புகையிலை பாக்கெட் மற்றும் 112 போலி பீடி பண்டல்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.
அம்மன்பட்டி ரசாக் மகன்கள் காதர்மைதீன் மற்றும் சித்திக்ராஜா ஆகியோர்களிடமிருந்து 1105 புகையிலை பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டது.
சிவகங்கை நகரில் எஸ்.பி., தனிப்படையினர் நடத்திய சோதனையில் 360 புகையிலை பாக்கெட்களும் 32 கூலீப் பாக்கெட்களும் கைப்பற்றப்பட்டது. சிவகங்கை தாலுகாவில் நேற்று முன்தினம் நடந்த சோதனையில் 42 கிலோ புகையிலை பாக்கெட்களும் 52 கூலீப் பாக்கெட்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.
புகையிலை பொருட்கள்வைத்திருந்த சாகுல்ஹமீது, காதர்மைதீன், சித்திக்ராஜா மற்றும் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

