/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வடகிழக்கு பருவ மழைக்கு 46 வீடுகள் சேதம்
/
வடகிழக்கு பருவ மழைக்கு 46 வீடுகள் சேதம்
ADDED : அக் 30, 2025 03:56 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அக்., 15 முதல் 24ம் தேதி வரை பெய்த மழைக்கு 46 ஓட்டு வீடுகள் சேதமானது. இந்த மழைக்கு இருவர் பலியாகினர், 2 கால்நடைகள் உயிரிழந்தன.
மாவட்ட அளவில் வடகிழக்கு பருவ மழை பரவலாக அக்., 15 முதல் பெய்ய தொடங்கியது. அதிகபட்சமாக அக்., 21 அன்று திருப்புவனத்தில் 84 மி.மீ., குறைந்த அளவாக திருப்புத்துாரில் 4.30 மி.மீ., மழை பதிவானது. அக்., 22 ம் தேதி பரவலாக மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்தது. அன்றயை தினமும் திருப்புவனத்தில் அதிகபட்சமாக 93.60 மி.மீ., மழையும், குறைந்த பட்சமாக மானாமதுரையில் 36.40 மி.மீ., மழை பதிவானது.
அக்., 15 முதல் 24 ம் தேதி வரை தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பெய்து, நீர்நிலைகளில் ஓரளவிற்கு தண்ணீர் வரத்தை ஏற்படுத்தியது. இந்த மழை காரணமாக 2 பேர், 2 கால்நடைகளும் பலியானது. மாவட்ட அளவில் கடந்த 10 நாட்களில் பெய்த மழை காரணமாக 1 ஓட்டு வீடு முற்றிலும் சேதமானது. 45 ஓட்டு வீடுகள் பகுதி சேதமானது.

