/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாய்க்கு வந்தும் கண்மாய்க்கு வராத தண்ணீர்... கவலை: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் விவசாயிகள்

ADDED : அக் 30, 2025 03:56 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதிக்கு திறக்கப்பட்ட பெரியாறு தண்ணீர், அதிகாரிகளின் பாராமுகத்தால் கண்மாய்களுக்கு வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிங்கம்புணரி பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் அக்.24 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. பாசன பகுதிகள் பயன்பெறும் வகையில் 20 நாட்களுக்கு 346 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மாவட்ட எல்கையான குட்டையன்பட்டி கீழ்சந்திக் கண்மாயில் தண்ணீர் பாயத்தொடங்கியது. முன்னதாக மதுரை மாவட்ட எல்கையில், பல இடங்களில் கால்வாயில் ஏற்பட்டுள்ள பள்ளம், அடைப்புகளை விவசாயிகளே இரவு பகலாக போராடி அடைத்து தண்ணீரை கொண்டு வந்தனர்.
சிவகங்கை மாவட்ட பகுதியில் பெரும்பாலும் கால்வாயில் சீமைக்கருவேல மரங்களும், குப்பை மண்டி கிடப்பதால் தண்ணீர் கண்மாய்களுக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த காலங்களில் இக்கால்வாய் தண்ணீர் காளாப்பூர், முறையூர், சூரக்குடி வரை விவசாயிகளால் கொண்டு செல்லப்பட்டது. இந்த முறை கால்வாயில் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றினால் தான் அது சாத்தியம் என்ற நிலை உள்ளது. தொடர்ச்சியாக விவசாயம் பொய்த்தும், விளைச்சல் இல்லாமலும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் விவசாயிகளால் கால்வாய் சீரமைப்புக்கு சொந்தப்பணம் செலவழிக்க முடியவில்லை.
இதில் நடவடிக்கை எடுக்கவேண்டிய துறை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருப்பது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.