ADDED : ஏப் 02, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் கடந்த மாதம் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 46 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,யாக ஆஷிஷ் ராவத் பொறுப்பேற்றதில் இருந்து மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தனிப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
கடந்த மாதத்தில் மட்டும் மாவட்டத்தில் 46 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட வாள், அரிவாள் 4 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. அதில் 20 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.