ADDED : ஜூலை 22, 2025 03:40 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட் டத்தில் 2024ம் ஆண்டு 4 லட்சத்து 9 ஆயிரத்து 249 வாகன விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட் டத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலை, 445 ஊராட்சிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராமச்சாலைகள் உள்ளன. மாவட்டம் முழு வதும் சாலை விபத்து ஆண்டுதோறும் அதி கரித்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் 5 மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட 49 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மாவட்டத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான டூவீலர்கள் உள்ளன.
கிராமச்சாலைகள் அதிக முள்ள இம்மாவட்டத்தில் வாகன விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்கள், பெண்கள் இருவருமே வாகன விதி மீறல்களில் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது.
கடந்த ஆண்டு 8 ஆயிரத்து 924 ஓவர் ஸ்பீடு வழக்கு, 3 ஆயிரத்து 962 சிக்னலை மீறி சென்ற வழக்கு, 15 ஆயிரத்து 195 அலைபேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய வழக்கு, 5 ஆயிரத்து 643 மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வழக்கு, கூடுதல் எடையுடன் சென்றதாக 246 வழக்கு, 2 லட்சத்து 43 ஆயிரத்து 592 ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டிய வழக்கு, 42 ஆயிரத்து 624 காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வழக்கு, இதர வாகன விதி மீறல் வழக்குகள் என கடந்த ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 9 ஆயிரத்து 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தொடர்ந்து விபத்து அதிகரித்து வரும் நிலையில், விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது அபராத தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. போலீசார் விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிந்தாலும் ஆண்டுதோறும் விதிமீறல் அதிகரிக்கிறதே தவிரே குறைந்த பாடில்லை.