/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டு பலாத்கார வழக்கில் 5 பேர் கைது
/
கூட்டு பலாத்கார வழக்கில் 5 பேர் கைது
ADDED : செப் 20, 2024 02:25 AM

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞருடன் அப்பெண் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அந்த இளைஞரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
காயமடைந்த இளைஞர் மருத்துவமனயில் சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவம் குறித்து நேற்று முன்தினம் இரவு அப்பெண் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., நிரேஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை தேடினர்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த வில்வக்குமார் 25, முத்துக்குமார் 26, ராமசாமி 24, அஜய்குமார் 19, தவமுனியசாமி 26, ஆகிய 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதில் முத்துக்குமார் மற்றும் வில்வக்குமார் போலீசாரை பார்த்தவுடன் தப்ப முயன்ற போது கால் தவறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.