ADDED : பிப் 14, 2025 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மதகுபட்டி அருகே பெரியகோட்டை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள முனிக்கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் சிவகங்கை, திருப்புத்துார், மேலுார், கல்லல் உள்ளிட்ட பகுதியில் இருந்து 300 மாடுகள் பங்கேற்றன. இதில் 200க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டு மாடுகளாக மலை அடிவாரத்தில் உள்ள பொட்டலில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டது. 100 மாடுகள் தொழுவத்தில் அவிழ்க்கப்பட்டது. மாடு முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.