ADDED : ஜன 02, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டை ஆதினமிளகி அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டது.
முதலாவதாக கோவில் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் மஞ்சுவிரட்டு பொட்டலில் ஆங்காங்கே கட்டு மாடுகளாக காளைகளை அதன் உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டனர். பொட்டலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளுடன் ஆர்வமுடன் மாடுபிடி வீரர்கள் விளையாடினர். அடங்க மறுத்த காளைகளையும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
காளைகள் முட்டியதில் 5க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.