ADDED : பிப் 17, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை,: மகாராஷ்டிரா மாநிலம்பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்த்32, இவர் மும்பையில் பணிபுரிந்து வரும் நிலையில் குடும்பத்தினருடன் காரில் ராமேஸ்வரம் சென்றார்.
மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே கார் வந்த போது அவ்வழியாக வந்த கதிர் அறுக்கும் இயந்திரம் எதிர்பாராத விதமாக மோதியதில் காரில் பயணம் செய்த கோவிந்த், அவரது தந்தை முஞ்சாபாவ் 58, தாய் சத்தியபாமா55, கோவிந்த் மகன் ஆத்விக் 4, மனைவி பூஜா 27, ஆகியோர் படுகாயமடைந்தனர்.