sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்

/

கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்

கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்

கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்


ADDED : மே 10, 2025 07:18 AM

Google News

ADDED : மே 10, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாச்சியாபுரம்: திருப்புத்துார் அருகே மேலமாகாணம் அருகில் கண்மாயில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 6 பயணிகள்காயமடைந்தனர். 53 பயணிகள் தப்பினர்

நேற்று காலை 7:30 மணிக்கு திருக்கோஷ்டியூரிலிருந்து காரைக்குடிக்கு தனியார் பஸ் சென்றது. மேலமாகாணம் அருகில் செல்லும்போது ரோட்டின் குறுக்கே மாடு வந்துள்ளது.

பஸ்சை திருப்பும் போது, கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கண்மாய் சரிவில் இறங்கி அருகிலிருந்த தாமரைக் கண்மாயில் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த 6 பயணிகள் காயமடைந்தனர்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த 53 பயணிகளும் பஸ் கண்ணாடியை உடைத்து வெளியேறினர். பின்னர் கிரேன் மூலம் பஸ் கண்மாயிலிருந்து மீட்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us