/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 86 மையங்களில் 57,934 டன் கொள்முதல் நடப்பு ஆண்டு 26,801 டன் அதிகம்
/
சிவகங்கையில் 86 மையங்களில் 57,934 டன் கொள்முதல் நடப்பு ஆண்டு 26,801 டன் அதிகம்
சிவகங்கையில் 86 மையங்களில் 57,934 டன் கொள்முதல் நடப்பு ஆண்டு 26,801 டன் அதிகம்
சிவகங்கையில் 86 மையங்களில் 57,934 டன் கொள்முதல் நடப்பு ஆண்டு 26,801 டன் அதிகம்
ADDED : மே 09, 2025 01:43 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இந்த ஆண்டு 13,430 விவசாயிகளிடம் இருந்து 57,934 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் தொடர்ந்து மழை, மேலடுக்கு சுழற்சி காரணமாக நீர்நிலைகள் நிரம்பின. வைகை ஆற்றில் வெள்ளம் ஓடியது.
இந்த நீர் ஆதாரத்தை வைத்து மாவட்ட அளவில் கடந்த ஆண்டு (2024-2025) ல் 2 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனர். நன்கு விளைந்த நெல்லை ஜன., முதல் ஏப்., வரை அறுவடை செய்தனர்.
சிவகங்கை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 86 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்லை கொள்முதல் செய்தனர். இதற்காக விவசாயிகளுக்கு சன்னரகம் குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.2450, புதுரகம் ரூ.2,405 வீதம் விலை கொடுத்தனர்.
ரூ.141.84 கோடி விடுவிப்பு
மாவட்ட அளவில் ஜன., முதல் ஏப்., வரை நடத்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் 13 ஆயிரத்து 430 விவசாயிகளிடம் இருந்து சன்னரக நெல் 57 ஆயிரத்து 857 டன், புதுரக நெல் 77 டன் என ஒட்டுமொத்தமாக 57 ஆயிரத்து 934 டன் நெல் கொள்முதல் செய்தனர்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.141 கோடியே 84 லட்சத்து 12 ஆயிரத்து 112 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

