/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
58,464 எக்டேர் பயிர் காப்பீடு பிரீமியம் கட்ட நவ.30 கடைசி நாள்
/
58,464 எக்டேர் பயிர் காப்பீடு பிரீமியம் கட்ட நவ.30 கடைசி நாள்
58,464 எக்டேர் பயிர் காப்பீடு பிரீமியம் கட்ட நவ.30 கடைசி நாள்
58,464 எக்டேர் பயிர் காப்பீடு பிரீமியம் கட்ட நவ.30 கடைசி நாள்
ADDED : நவ 25, 2025 04:46 AM
சிவகங்கை: நெற்பயிருக்கு காப் பீட்டிற்கான பிரீமிய தொகை செலுத்த இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், இது வரை 59,619 விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர் என வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகா லிங்கம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
நடப்பு ஆண்டிற்கு ரபி சிறப்பு பருவத்தில் தேர்வு செய்த வருவாய் கிராமங்களுக்கு நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான பிரீமிய தொகை செலுத்த நவ., 30 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் 72,129 எக்டேர் நெல் சாகுபடி செய்துள்ள நிலையில், இது வரை 59,619 விவ சாயிகள் 58 ஆயிரத்து 464.71 எக்டேர் பரப்பிற்கு மட்டுமே காப்பீடு செய்துள்ளனர்.
இதில் இளையான்குடியில் 18,689, காளையார்கோவிலில் 11,911, தேவகோட்டையில் 11,348, கண்ணங்குடியில் 5737, மானாமதுரையில் 4530, எஸ்.புதுாரில் 19, சாக்கோட்டையில் 2139, கல்லலில் 1559, சிவ கங்கையில் 1438, சிங்கம் புணரியில் 414, திருப்புத்துாரில் 572, திருப்புவனத்தில் 109 எக்டேருக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே நவ.,30க்குள் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீட்டிற்கான பிரீமிய தொகை செலுத்தி பயன் பெறலாம். பிரீமிய தொகை செலுத்த கூட்டுறவு, தேசிய வங்கிகள், இ--சேவை மையங்களில் விண்ணப்பத்துடன், வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல் சான்று, ஆதார் எண் இணைத்த வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் இணைத்து காப்பீடு செய்ய வேண்டும் என்றார்.

