/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாடகை கட்டடத்தில் தபால் அலுவலகங்கள் இடம் ஒதுக்குவாரா கலெக்டர்
/
வாடகை கட்டடத்தில் தபால் அலுவலகங்கள் இடம் ஒதுக்குவாரா கலெக்டர்
வாடகை கட்டடத்தில் தபால் அலுவலகங்கள் இடம் ஒதுக்குவாரா கலெக்டர்
வாடகை கட்டடத்தில் தபால் அலுவலகங்கள் இடம் ஒதுக்குவாரா கலெக்டர்
ADDED : நவ 25, 2025 04:45 AM
சிவகங்கை: சிவகங்கையில் தபால் துறை கண்காணிப்பாளர், ஆய்வாளர், தலைமை தபால் நிலையத்திற்கு சொந்த கட்டடமின்றி 20 ஆண்டாக வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது.
சிவகங்கையில் 20 ஆண்டிற்கு முன் தலைமை தபால் நிலையம்,அதனை தொடர்ந்து மாவட்ட கோட்ட கண்காணிப் பாளர் அலுவலகம், ஆய்வாளர் அலுவலகம் துவக்கப்பட்டது. தலைமை தபால் நிலையம் மூலம் பணம் டெபாசிட், போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்கு ஏ.டி.எம்., மூலம் பணம் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முத்துசாமி நகரில் கோட்ட கண் காணிப்பாளர், தபால் ஆய்வாளர் அலுவலகமும், வாரச்சந்தை ரோட்டில் தலைமை தபால் நிலையம் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்தன.
அக்., மாதம் அனைத்து அலுவலகத்தையும் ஒன் றிணைத்து, தொண்டி ரோட்டில் ஒரே கட்டடத்தில் அலுவலகம் செயல் படுகிறது. மாதத்திற்கு பல ஆயிரம் ரூபாய் வாடகையாக தபால் துறை வழங்கி வருகிறது.
தபால் துறை அதி காரிகள் கூறியதாவது:
சிவகங்கையில் பையூர் பிள்ளைவயல் குரூப்பில், தபால் துறைக்கு சொந்த கட்டடம் கட்ட 50 சென்ட் நிலம் நகரை ஒட்டி வழங்குமாறு, கலெக் டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்தால் விரைந்து சொந்த கட்டடம் கட்ட மத்திய தகவல் தொடர்புதுறையிடம் நிதி பெற்று, கட்டப்படும் என்றனர்.

