/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்திற்கு 61 டன் விதை நெல்
/
திருப்புவனத்திற்கு 61 டன் விதை நெல்
ADDED : செப் 16, 2025 04:20 AM
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் இந்தாண்டு சம்பா பருவத்திற்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 61 டன் விதை நெல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வைகை ஆறு பாயும் திருப்புவனம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் என்.எல்.ஆர்., கோ 50, கோ51, அண்ணா ஆர் 4, டி.கே.எம்., அட்சயா உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுகிறது.
என்.எல்.ஆர்., ரகம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ விதை நெல் 44 ரூபாய் என்றும் இதில் இருபது ரூபாய் மானியம் போக மீதி 24 ரூபாய் செலுத்தி விதை நெல் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் இதுவரை 208.4 மி.மீ., மழை பெய்துள்ளது. மழை காரணமாக விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் நாற்றங்கால் தயார் செய்து விதை நெல் துாவி நாற்று வளர்த்து அதனை பறித்து வயல்களில் நடவு செய்வார்கள், கடந்தாண்டு சாகுபடி பரப்பளவு குறைந்த நிலையில் இந்தாண்டு சாகுபடி பரப்பளவை அதிகரிக்க கூடுதல் விதை நெல் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில்: கடந்த 2023--24ல் 52 டன், 2024-25ல் 44 டன், 2025- 26ல் 61 டன் விதை நெல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.