/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு 62 பேர் காயம்
/
கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு 62 பேர் காயம்
ADDED : ஏப் 25, 2025 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர்: கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கத்தில் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மன் வழிபாட்டிற்கு பிறகு மஞ்சுவிரட்டு துவங்கியது.
தொழுவிலிருந்து 300க்கும் அதிகமான காளைகள் அவிழ்க்கப்பட்டன. மாடுகளை பிடிக்க 43 வீரர்கள் பங்கேற்றனர். மேலும் காலையிலிருந்து பரவலாக நுாற்றுக்கணக்கான கட்டுமாடுகளும் அவிழ்க்கப்பட்டன.
மாடுகள் முட்டியதில் வீரர்கள்,பார்வையாளர்கள் உட்பட 62 பேர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் திருப்புத்துார், சிவகங்கை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.