ADDED : அக் 20, 2026 06:59 PM
சிவகங்கை: மாவட்ட அளவில் நேற்று முன்தினம் அனைத்து தாலுகாக்களிலும் நல்ல மழை பெய்தது.
தேவகோட்டையில் அதிகபட்சமாக 62.40 மி.மீ., மழை பதிவானது. தமிழகத்தில் அக்., 15 முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் இடி, மின்னலுடன் பெய்த மழைக்கு மின்னல் தாக்கியதில் இளையான்குடி அருகே திருவள்ளூரில் விவசாய பணியில் இருந்த 2 பெண்கள் பலியாகினர். ஆடுகள் சிலவும் பலியானது. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு விளைநிலங்களில் மழை நீர் தேங்கி விவசாய பணிகளை துவக்கி விட்டனர். நேற்று முன்தினம் மாவட்ட அளவில் அனைத்து தாலுகாக்களிலும் நல்ல மழை பெய்தது. தேவகோட்டையில் அதிகபட்சமாக 62.40 மி.மீ., குறைந்த பட்சம் சிவகங்கையில் - 15 மி.மீ., மழை பதிவானது. திருப்புத்துார் - 60, மானாமதுரை - 57, காரைக்குடி - 40, சிங்கம்புணரி - 29.20, காளையார்கோவில் - 25.60, திருப்புவனம் - 22.60, இளையான்குடி -18 மி.மீ., பெய்துள்ளது. ///
