/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் அருகே 64 ஆண்டு கிணறு உள்வாங்கியதால் மக்கள் பீதி
/
காளையார்கோவில் அருகே 64 ஆண்டு கிணறு உள்வாங்கியதால் மக்கள் பீதி
காளையார்கோவில் அருகே 64 ஆண்டு கிணறு உள்வாங்கியதால் மக்கள் பீதி
காளையார்கோவில் அருகே 64 ஆண்டு கிணறு உள்வாங்கியதால் மக்கள் பீதி
ADDED : நவ 04, 2024 11:19 PM

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம், அம்மாபட்டினத்தில் 64 ஆண்டு பழமையான குடிநீர் கிணறு திடீரனெ உள்வாங்கியதால், மக்கள் பீதி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா அம்மாபட்டினம் கிராம நுழைவு வாயிலில் 64 ஆண்டுக்கு முன் சமுதாய கிணறு தோண்டப்பட்டு, 5 அடி உயரத்திற்கு கருங்கற்களால் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. தொடர்ந்து இக்கிணற்றில் இருந்து அம்மாபட்டினம், வேலடிதம்மம், வேம்பணி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் குடிநீர் எடுத்து செல்கின்றனர்.
இப்பகுதியில் குடிநீர் ஊற்று நன்றாக இருப்பதால், புளியடிதம்பம், வேலடி மடை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் எடுத்து செல்ல 4 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். அதில், இரண்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர். நேற்று மதியம் 2:00 மணி வரை அம்மாபட்டினத்தில் உள்ள சமுதாய கிணற்றில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து சென்றுள்ளனர். மதியம் 2:30 மணிக்கு இந்த கிணற்றின் சுற்றுச்சுவர் திடீரென அதிர்வு ஏற்பட்டு தடுப்புச் சுவர் கிணற்றிற்குள் உள்வாங்கியது.
அதை தொடர்ந்து கிணற்றின் சுற்றுச்சுவரும் உள்வாங்கியதால், கிராம மக்கள் பீதி அடைந்தனர். சம்பவ இடத்தை காளையார்கோயில் தாசில்தார் முபாரக் உசேன், மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், மூவர்கண்மாய் வி.ஏ.ஓ., ரோஸ் மலர், புளியடிதம்பம் ஊராட்சி தலைவர் பாண்டி பார்வையிட்டு, பாதுகாப்பிற்காக முள்வேலி அமைத்துள்ளனர்.

