sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட 6.5 லட்சம் பேர்

/

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட 6.5 லட்சம் பேர்

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட 6.5 லட்சம் பேர்

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட 6.5 லட்சம் பேர்


ADDED : ஜன 07, 2025 04:53 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி: கீழடியில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை 20 மாதங்களில் ஆறரை லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில்2015ம் ஆண்டு அகழாய்வுபணிகள் தொடங்கின. இதில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய செங்கல் கட்டுமானம், தந்த சீப்பு, பானை குறியீடுகள், பாசிகள், தங்க காதணிகள் என ஏராளமான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன்பின் தமிழக தொல்லியல்துறை தொடர்ந்து அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 18 கோடியே 44 லட்ச ரூபாய் செலவில்கட்டப்பட்டு 2023 மார்ச் 5ம்தேதி திறக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகளை கவர ஒவ்வொரு கட்டட தொகுதிகளிலும் 2600 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்த விளக்கபடம் அனிமேஷன் காட்சிகளுடன் டிவிக்களில் தொடர்ச்சியாக ஒளி, ஒலிபரப்பட்டு வருகிறது. கீழடி அகழாய்வு குறித்த 15 நிமிட குறும்படம் மினி ஏசி தியேட்டரில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் இலவசமாக ஒளிபரப்பப்படுகிறது.

மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டு ஒரு மாதம் வரை இலவசமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் ஏப்ரல் முதல் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும், மாணவர்களுக்கு ஐந்து ரூபாயும், வெளிநாட்டினர் பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 25 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுவரை 20 மாதங்களில் பெரியவர்கள் மூன்று லட்சத்து 53 ஆயிரத்து 626 பேரும், சிறியவர்கள் 93 ஆயிரத்து 637 பேரும், மாணவ,மாணவியர்கள் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 324 பேரும், வெளிநாட்டினர் ஆயிரத்து 249 பேரும், வெளிநாட்டு சிறுவர்கள் 110 பேரும், இலவசமாக 62 ஆயிரத்து 802 பேரும் பார்வையிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us