/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு 650 காளைகள் பங்கேற்பு
/
அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு 650 காளைகள் பங்கேற்பு
ADDED : மே 23, 2025 11:45 PM

சாலைக்கிராமம்:சாலைக்கிராமம் அருகே உள்ள அய்யம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 650க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சாலைக்கிராமம் அருகே அய்யம்பட்டியில் உள்ள கலுங்கு முனீஸ்வரர் கோயில் களரி உற்ஸவ திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டை நேற்று காலை 9:00மணிக்கு எம்.எல்.ஏ.தமிழரசி, ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன் துவக்கி வைத்தனர்.
முதலில் கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடுபிடி வீரர்கள் கும்பிட்டு பிடிக்காமல் மரியாதை செலுத்தினர். பின்னர் சிவகங்கை,ராமநாதபுரம், விருதுநகர், மதுரை,புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 650க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதனை களத்தில் இருந்த மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக பிடித்தனர்.
மாடுகளைப் பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. காயமடைந்த வீரர்களுக்கு இளையான்குடி, சாலைக்கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.