ADDED : மே 09, 2025 01:45 AM
சிவகங்கை: சிவகங்கையில் நேற்றும் முன்தினம் மாலை தெரு நாய்கள் கடித்ததில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவகங்கை நேருபஜார், மஜித்ரோடு, உழவர் சந்தை, வாரச்சந்தை ரோடு உட்பட பல பகுதிகளில் கும்பலாக திரியும் நாய்கள் டூவீலரில் செல்பவர்களை விரட்டி கடிக்கின்றன.
நாய்க்கடிக்கு ஆளான பலர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
நேற்று மாலை 6:00 மணி முதல் 9:00 மணிக்குள் அண்ணாமலை நகர் பாப்பா 60, நேருபஜார் பீர் முகமது 35, மதுரை மணி 39, முத்துநகர் ஸ்ரீராம் 28, தொண்டி ரோடு ராம்மோகன் 52, அண்ணாமலை நகர் கோவிந்தன் 69,செந்தமிழ்நகர் முனீஸ்வரி 25 உள்ளிட்ட 7 பேர் நாய் கடிபட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர்.
நகரில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அதிகரித்துவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

