/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாய்கள் வேட்டையாடி 7 செம்மறி ஆடுகள் பலி
/
நாய்கள் வேட்டையாடி 7 செம்மறி ஆடுகள் பலி
ADDED : ஜூலை 18, 2025 08:36 PM

சிவகங்கை:சிவகங்கை அருகே, உதராப்புலி கிராமத்தில் வேட்டை நாய்கள் கடித்து ஏழு ஆடுகள் பலியாகின.
சிவகங்கை மாவட்டம், உதராப்புலியை சேர்ந்த விவசாயி பிச்சை அருளாந்து, தன் நிலத்தில் செம்மறி ஆடுகளை கிடை அமைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மேய்ச்சலுக்கு சென்று வந்த, 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை, கிடையில் அடைத்துள்ளார்.
அப்போது, 20க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள், அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில், ஏழு செம்மறி ஆடுகள் பலியாகின. காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயலர் ஆர்.எம்.முருகன் கூறியதாவது:
சிவகங்கை அருகே குப்பை கிடங்குகளில் கிடைக்கும் உணவு பொருட்களை சாப்பிடும் நாய்கள், இரவில் அருகில் உள்ள மாடக்கோட்டை, உசிலங்குளம், கடுக்காப்பாள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆட்டு கிடைகளுக்குள் புகுந்து ஆடுகளை கடித்து வருகின்றன.
செவ்வாய் சந்தை காப்பு காட்டிற்குள் திரியும் மான்களையும் கடித்து விடுகின்றன. ஆடு, மான்களை கடிக்கும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.