ADDED : ஆக 19, 2025 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் தாலுகாவில் குவாரியில் ஏற்பட்ட தகராறில் காரை சேதப்படுத்திய நான்கு பேரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம் சேதுபதி நகரில் வசிப்பவர் ஆகாஷ் அகிலேஷ் வரன் வயல்சேரியை சேர்ந்த இவரது காரை குவாரியில் ஏற்பட்ட தக ராறில் மேலராங்கி யத்தைச் சேர்ந்த பால முருகன், கொம்பையா, சதீஷ்குமார், நாகப்பா ஆகியோர் அடித்து உடைத்தனர்.
பதிலுக்கு மேலராங்கியத்தைச் சேர்ந்த வீரமணியை மது அருந்தும் போது ஏற்பட்ட தக ராறில் அருண், வினோத், ஆகாஷ், யோகேஷ் ஆகியோர் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.