ADDED : மார் 21, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை தொகுதி நிலையான கண்காணிப்பு குழு துணை தாசில்தார் சங்கர் தலைமையிலான போலீசார் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தவழியாக உடவயல் கிராமத்தை சேர்ந்த செந்தில் வந்த காரை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.83 ஆயிரம் கொண்டு சென்றது உறுதி செய்யப்பட்டு விசாரித்தனர். செந்தில் மானாமதுரை சிப்காட் அருகே உள்ள மானம்பாக்கி கிராமத்தில் கட்டப்படும் கோவிலில் சிற்ப வேலை செய்வதற்கு கிராமத்தினர் கொடுத்த சம்பள பணம் என்றார்.
உரிய ஆவணம் கட்டி பணத்தை பெற்று செல்லுமாறு செந்திலிடம் அறிவுறுத்தி பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

