/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி பேரூராட்சியில் 48 லட்சத்தில் 950 விளக்குகள்
/
இளையான்குடி பேரூராட்சியில் 48 லட்சத்தில் 950 விளக்குகள்
இளையான்குடி பேரூராட்சியில் 48 லட்சத்தில் 950 விளக்குகள்
இளையான்குடி பேரூராட்சியில் 48 லட்சத்தில் 950 விளக்குகள்
ADDED : ஜன 13, 2024 05:16 AM
இளையான்குடி, : இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.48 லட்சம் செலவில் 950 எல்.இ.டி.,விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செயல் அலுவலர் கோபிநாத் தெரிவித்தார்.
இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார்.தலைமை அலுவலர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
செய்யது ஜமீமா தி.மு.க., கவுன்சிலர்: இளையான்குடி பழைய பேரூராட்சி கட்டடத்தை இடித்துவிட்டு நுாலகம் மற்றும் வணிக வளாகம் கட்டப்படுவது போன்று இளையான்குடி அரசு மருத்துவமனையையும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயல் அலுவலர் கோபிநாத்: அரசு மருத்துவமனை வளாகம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது ஆகவே இது குறித்து மாவட்ட கலெக்டர் தான் முடிவெடுக்க முடியும்.
ஜலாலுதீன் ம.ம.க., கவுன்சிலர்: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.
செயல் அலுவலர் கோபிநாத்: பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க போதுமான இட வசதி இல்லாததால் தற்போது ஒரு இடத்தில் மட்டும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாகூர் மீரா அ.தி.மு.க., கவுன்சிலர்: குப்பைகளை அள்ள தேவையான டிராக்டர்களை வாங்க வேண்டும் காவிரி குடிநீரில் அதிகளவு குளோரின் பவுடர் கலப்பதால் தண்ணீரை குடிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செயல் அலுவலர் கோபிநாத்: டிராக்டர்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது காவிரி குடிநீரில் இயந்திரங்களின் துணையோடு தேவையான அளவு குளோரின் மட்டுமே கலக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரின் பேகம்: தி.மு.க., கவுன்சிலர்: எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்காமல் இருப்பதினால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
செயல் அலுவலர் கோபிநாத்: இளையான்குடியில் ரூபாய் 48 லட்சம் செலவில் 950 எல் இ டி விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.