/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை மிரள வைக்க தயாராகும் காளை
/
ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை மிரள வைக்க தயாராகும் காளை
ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை மிரள வைக்க தயாராகும் காளை
ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை மிரள வைக்க தயாராகும் காளை
ADDED : ஜன 09, 2024 12:26 AM

சிவகங்கை, : பொங்கலை முன்னிட்டு தென்மாவட்ட ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களைமிரட்ட களம் காண சிவகங்கை அருகே கண்ணாரிருப்பை சேர்ந்த காளை (மேஷம்) தயாராகி வருகிறது.
தை பொங்கலை முன்னிட்டு ஜன.,15 முதல் மதுரை அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் போன்ற முக்கிய ஜல்லிக்கட்டு களங்கள் வீரர்கள், காளைகளின் வீரம் பறைசாற்றும் விதத்தில் அமைந்திருக்கும். ஜல்லிக்கட்டு விழாவிற்காக காளை வளர்ப்போர், அவற்றிற்கு பயிற்சி அளித்து களம் காண தயார்படுத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே கண்ணாரிருப்பை சேர்ந்த ஜெ.கண்ணன் என்பவர் கடந்த சில ஆண்டாக ஜல்லிக்கட்டு களம் காண 'மேஷம்' என்ற பெயரில்காளை (6 பல் உள்ளது) வளர்த்து வருகிறார். களத்தில் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல், துள்ளிக்குதித்து ஓடுவதில் இந்த காளைக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்த காளை அலங்காநல்லுார், தமறாக்கி, கட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் காளையர்களுக்கு பிடி கொடுக்காமல் மிரட்டி வருகிறது. இது வரை நடந்த ஜல்லிக்கட்டில் இந்த காளை பல பரிசுகளை தட்டி சென்று, காளை உரிமையாளரை பெருமை படுத்தி வருகிறது.
காளை உரிமையாளர்ஜெ.கண்ணன் கூறியதாவது:
கண்ணாரிருப்பு பொய்சொல்லா அய்யனார் கோயிலில் நேர்த்தி வைத்து காளை வளர்த்து, அங்கு ஜல்லிக்கட்டு நடத்தி வந்தோம். அப்பகுதி விளைச்சலில் சிறந்து விளங்கியது.அந்த பாரம்பரியத்தை தொடரும் விதமாக ஜல்லிக்கட்டு காளை (மேஷம்) வளர்க்கிறேன்.
இதற்கு தினமும் நடை, நீச்சல், மண் குத்துதல், மூச்சு பயிற்சி அளித்து, ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் இருக்க பயிற்சி அளிக்கிறேன்.
இந்த காளைக்கு சோளம், பச்சரிசி, பருத்தி கொட்டை கொண்டக்கடலை வைத்து தினமும்காலை, மாலையில் வழங்குவேன். இது தவிர பசுந்தீவனம், வைக்கோல் வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு களத்தில் தைரியமாக களம் காண தினமும் ஒன்றரை மணி நேர பயிற்சி அளித்து வருகிறேன். இந்த காளைக்காக மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவிடுகிறேன் என்றார்.