/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.காளாப்பூரில் மாட்டுவண்டி பந்தயம்
/
அ.காளாப்பூரில் மாட்டுவண்டி பந்தயம்
ADDED : செப் 23, 2024 06:12 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் 54 ஜோடி மாடுகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன.
அ.காளாப்பூரில் மறைந்த தே.மு.தி.க., நிறுவனர் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருவேங்கடம், உயர்மட்ட குழு உறுப்பினர் எம்.ஆர்.பன்னீர் செல்வம், பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து மாடுகள் பங்கேற்றன. காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பிரிவுகளாக பந்தயம் நடந்தது.
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.