/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இணைப்பு ரோட்டில் சரியும் மின்கம்பம்
/
இணைப்பு ரோட்டில் சரியும் மின்கம்பம்
ADDED : நவ 02, 2024 09:06 AM

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூரிலிருந்து மதுரை செல்லும் இணைப்பு ரோட்டில் சரிந்துள்ள மின் கம்பத்தை சீரமைக்க கோரியுள்ளனர்.
திருப்புத்துார் அருகே சிவகங்கை ரோட்டில் திருக்கோஷ்டியூரிலிருந்து குண்டேந்தல் பட்டி, சுண்ணாம்பிருப்பு வழியாக மதுரை ரோட்டிற்கு இணைப்பு ரோடு செல்கிறது. அதில் குண்டேந்தல்பட்டி அருகில் ரோட்டோரத்தில் மின்கம்பங்கள் வரிசையாக உள்ளன.
அதில் ஒரு கம்பம் சாய்ந்து காணப்படுகிறது. அப்பகுதியில் மின்கம்பிகளும் சாய்ந்து செல்கின்றன.
இது தொடர்ந்தால் மேலும் மற்ற கம்பங்களும் சரியத் துவங்கும். காற்று வீசும் போது மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாய்ந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.