/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாயில் தவறி விழுந்து கட்டட தொழிலாளி பலி
/
கால்வாயில் தவறி விழுந்து கட்டட தொழிலாளி பலி
ADDED : நவ 07, 2024 01:19 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் கால்வாய் கரையில் படுத்திருந்த கட்டட தொழிலாளி தவறி விழுந்ததில் உயிரிழந்தார். வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் தட்டான்குளம் தடுப்பணையில் இருந்து பிரமனுார் கண்மாய்க்கு கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தண்ணீர் செல்கிறது. 15 அடி உயரமுள்ள கால்வாயில் ஐந்து அடி உயரத்திற்கு சகதியாக உள்ளது. மேல்புறம் ஐந்து அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது.
தனியார் பள்ளி அருகே கால்வாயின் கரைப்பகுதியில் உள்ள சிமென்ட் தளத்தில் கூலி தொழிலாளர்கள் ஓய்வெடுப்பது வழக்கம், நேற்று காலை சிவனாங்குளத்தைச் சேர்ந்த முத்தையா 52, என்ற கட்டட தொழிலாளி கரையில் படுத்திருந்தவர் தவறி கால்வாயினுள் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றும் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார்.
மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தேடினர். பிரமனூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு மாலை வரை தேடியும் உடல் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் திரும்பினர். நேற்று மாலை போலீஸ் ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள கால்வாயில் உடல் கிடப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் சிவகுமார் எஸ்.ஐ., சிவப்பிரகாஷ் தலைமையில் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.