/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜெயங்கொண்ட நிலையில் மாடுமுட்டி ஒருவர் பலி
/
ஜெயங்கொண்ட நிலையில் மாடுமுட்டி ஒருவர் பலி
ADDED : ஜூன் 12, 2025 10:59 PM
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி ஒருவர் பலியானார்.
இங்குள்ள மந்தை கருப்பர் கோயில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது.
கிராமத்தார்கள் ஊர்வலமாக வந்து தொழுவில் உள்ள அனைத்து காளைகளுக்கும் வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் வெளியேறின. அங்குள்ள வயல்வெளியில் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்க்கப்பட்டன.
அப்போது ஒரு மாடு முட்டியதில் திருப்புத்தூர் அருகே நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த அழகேசன் மகன் மகேந்திரன் 50, சம்பவ இடத்திலேயே பலியானார். அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கிராமத்தினர் மீது எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.