/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் கிணறு அருகே உருவான பள்ளம்
/
குடிநீர் கிணறு அருகே உருவான பள்ளம்
ADDED : ஜூலை 12, 2025 11:50 PM

திருப்புவனம்: திருப்புவனம் புதுார் வைகை ஆற்றில் குடிநீர் கிணறு அருகே திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் கிணறு சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்புவனம் புதுார் வைகை ஆற்றுப்படுகையில் திறந்த வெளி கிணறு உள்ளது. இங்கிருந்து உறிஞ்சப்படும் நீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு இந்திராநகர், குயவன்கோயில் தெரு, முஸ்லிம் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி விநியோகம் செய்யப்படுகிறது.
நேற்று இக்கிணறு அருகே 15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்திற்கான காரணம் தெரியவில்லை. வைகை ஆற்றில் பல இடங்களில் ஆழ்துளை கிணறாக மாறிய நிலையில் திருப்புவனம் புதுாரில் மட்டும் திறந்தவெளி கிணறாகவே உள்ளது. கிணறு அருகே ஏற்பட்ட பள்ளத்தால் கிணறு சரிந்து விழும் அபாயம் உள்ளது.
வைகை ஆற்றின் கிணறு அருகே ஏற்பட்டுள்ள பள்ளம் குறித்து ஆய்வு மேற்கொண்டு பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.