/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தண்ணீர் தேடி வந்த மான் வாகனம் மோதி பலி
/
தண்ணீர் தேடி வந்த மான் வாகனம் மோதி பலி
ADDED : செப் 28, 2024 06:27 AM

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேலப்பசலை மேம்பாலம் அருகே மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.
மானாமதுரையை சுற்றியுள்ள எம்.கரிசல்குளம், தீயனுார், மேலப்பசலை, கால்பிரவு, வேலுார், பெரியகோட்டை, கிருங்காகோட்டை உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக இருப்பதால் காட்டுப்பகுதி நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியதையடுத்து புள்ளி மான்கள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு வருகின்றன.
சில நேரம் நாய்களிடம் சிக்கியும் சாலையை கடக்கும் போதும் வாகனத்தில் அடிபட்டு இறக்கின்றன. சில மாதங்களுக்கு முன் கிருங்காகோட்டை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது 3 புள்ளி மான்கள் ரயில் மோதி பலியாகின. இந்நிலையில் நேற்று அதிகாலை மேலப்பசலை மேம்பாலம் அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.வனத்துறை அதிகாரிகள் மானின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.